6 std Lesson plan | Click Here |
7 std Lesson plan | Click Here |
8 std Lesson plan | Click Here |
தமிழ்நாட்டில் இன்று 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று உயிரிழப்பு குறைந்து இருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.தினசரி பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. கோவை இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்று மட்டும் 1,02,174 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டிகொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது கொரோனா 700-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பு 27,34,715 உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா உயிரிழப்பு அதிகரிப்புஇது நேற்றை விட அதிகமாகும். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,599 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 719 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,90,346 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.சென்னை முதலிடம்7,770 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,02,174 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,44,59,742 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.இரண்டு சதம்கோவை 108 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது. செங்கல்பட்டில் 50 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 16 பேருக்கும், மதுரையில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 13 பேருக்கும், திருவள்ளூரில் 22 பேருக்கும், திருச்சியில் 18 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 48 பேருக்கும், ஈரோட்டில் 54 பேருக்கும், சேலத்தில் 43 பேருக்கும், நாமக்கல்லில் 49 பேருக்கும், தஞ்சாவூரில் 13 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையிலும், கோவையிலும் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது
No comments:
Post a Comment